குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-10-19 17:27 GMT
கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் புளியங்குடி பகுதியில் இருந்து தில்லானா நாயகபுரம், ம.உடையூர், கூத்தூர், எடையார், பிள்ளையார்தாங்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினந்தோறும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெற்று வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி கொள்ளிடம் குடிநீர் திட்டம் சரிவர செயல்படாததால் மேற்கண்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு சரிவர குடிநீா் வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்