சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-16 17:44 GMT

மதுரை பாரதிநகர் பாண்டியன் கோவில் தெரு பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிப்பதுடன் கழிவுநீர் கலந்து கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

மேலும் செய்திகள்