விக்கிரவாண்டி வட்டம் பனமலைப்பேட்டை பெரிய ஏரியில் உள்ள மதகு வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் ஏரியில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.