வீணாகும் குடிநீர்

Update: 2022-07-15 17:33 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் எஸ்.வாழவந்தி வடக்கு தெருவில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர்தொட்டிக்கு குழாய் மூலம் தண்ணீர் செல்கிறது. தற்போது குடிநீர்குழாய் உடைந்து 2 மாதமாக அதிகளவில் தண்ணீர் கிணற்றுக்குள் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர்செல்வதும் குறைந்து பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிக்கின்றனர். இதற்கு விரைவில் நடவடிக்கை எடுத்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.

-வீரன், எஸ்.வாழவந்தி, நாமக்கல்.

மேலும் செய்திகள்