வழுக்கம்பாறையில் இருந்து அஞ்சுகிராமம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சகாயபுரம் பகுதியில் பஸ்நிறுத்தத்தின் அருகில் கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சிமெண்டு சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப்பு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுகுணா, சகாயபுரம்.