தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் பகுதி சீதாலெட்சுமிபுரத்தில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாய் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் குடிநீர் குழாயை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த குடிநீர் குழாயை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீரிலும் கழிவுநீர் கலந்து சுகாதாரமற்ற நிலைக்கு மாறுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?