மூடப்படாத பள்ளம்

Update: 2022-10-05 14:37 GMT
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி 10-வது வார்டு செல்வமருதூர் பவுண்டு தெரு பகுதியில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிமெண்டு ரோட்டில் 10 இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. அதன் பின்னர் பணிகள் முடிந்தும் இதுவரை பள்ளங்கள் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே பள்ளங்களை மூடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்