வீணாகும் குடிநீர்

Update: 2022-10-03 16:27 GMT

கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் காலேஜ் ரோட்டில் கொட்டாரம் தெற்கு தெரு உள்ளது. இந்த தெருவில் குடிநீர் திறந்து விடுவதற்கும், அடைப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ள வால்வு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குடிநீர் வீணாக சாலையில் பாய்ந்து தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசுக்குள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த வால்வை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராமதாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்