கூத்தாநல்லூர் தாலுகா, ராமானுஜமணலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களில் வசதிக்காக அந்த கிராமத்தில் கைப்பம்பு அமைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் தேவை பூர்த்தி செய்து வந்தனர். ஆனால் அந்த கைப்பம்பில் தண்ணீர் உப்பு நீராக வருகிறது. இதனை பயன்படுத்துவதில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.