குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பெரியபள்ளியின் பின்புறம் பொதுகுடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயை அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். தற்போது, இந்த குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீருக்காக வேறு பகுதிக்கு சென்று எடுத்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி அந்த பகுதியில் மீண்டும் குடிநீர் குழாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபுதாய்ரு, குளச்சல்.