பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளாட்சி நிர்வாகம். சாலை, தெருவிளக்கு, சுகாதாரம், குடிநீர் வினியோகம் என பலப்பல உள்ளன.இதில் குடிநீரை வினியோகம் செய்ய உள்ளாட்சி நிர்வாகம் ஏராளமான பணத்தை செலவு செய்கிறது. ஒவ்வொரு உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் நீண்ட தூரத்தில் இருந்துதான் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. ஆனால் அவை வீடுகளை சென்று சேரும் முன் வீணாகிறது. திருப்பூர் ராயபுரம் பகுதியில் குடிநீர் வீணாக கலக்கிறது.