குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2022-09-30 16:06 GMT
புவனகிரி பேரூராட்சி செட்டி தெருவில் குடிநீர் குழாய் உடைந்து ஒரு வாராமாக குடிநீர் வீணாகி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் செட்டி தெரு, கொத்தை தெரு, பாலையக்கார தெரு, கம்மாளர் தெரு போன்ற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சாலையில் குடிநீர் தேங்கி நிற்பதால், கொசுக்கல் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்