திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி சந்திப்பில், கன்னியாகுமரி-திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சாலை சேதம் அடைவதுடன், சாக்கடை போல் மாறி துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டுகிறேன்.