வடிகால் அடைப்பு சரி செய்யப்படுமா?

Update: 2022-09-28 13:48 GMT

திருவாரூர் நகரில் நேதாஜி சாலையில் ராமானுஜன் ஆர்ச் உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல வழியின்றி சாலையில் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்