நாகை மாவட்டம் வாய்மேடு அருகே ஆயக்காரன்புலம் புதுரோடு பகுதியில் இருந்து வேதாரண்யம் செல்லும் சாலை உள்ளது. இந்த பகுதியின் வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் செல்கிறது. கடந்த சில வாரங்களாக இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஓடுகிறது. இதனால் குடிநீர், கழிவுநீர் போல் தேங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.