குளம் போல் தேங்கும் மழைநீர்

Update: 2022-09-28 13:14 GMT

நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சியில் மெயின் சாலையில் இருந்து தண்டபாணி கோவில் தெரு, செட்டி தெரு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலை கடந்த சில மாதங்களாக இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்