சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்த ஆனையம்பட்டி புதூரில் கடந்த 10 ஆண்டுகளாக பொது குடிநீர் வசதியே உள்ளது. இதனால் ஒரு குடிநீர் குழாயில் 4 முதல் 6 குடும்பங்கள் வரை தண்ணீரை பிடிக்கின்றனர். இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அனைவருக்கும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.