தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டை பஞ்சாயத்து சிவகாமிபுரத்தில் ரெயில்வே கேட் கீழ்பாலத்தில் மழைநீர் வடிவதற்கு வழி இல்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் கீழ்பாலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள், கார்களுக்குள் தண்ணீர் புகுந்து வாகனங்கள் பழுதடைகின்றன. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?