திருவாரூர் ரெயில்வே கீழ்பாலத்தில் மழைநீர் வடிவதற்கு வழி இல்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் கீழ்பாலத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள், கார்களுக்குள் தண்ணீர் புகுந்து வாகனங்கள் பழதடைகின்றன. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கீழ்பாலத்தின் வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?