கோவை மாநகராட்சி 89-வது வார்டு கோவைப்புதூர்-புட்டு விக்கி சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணியின் போது குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இதனால் குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதன் காரணமாக சாலை பழுதடையும் நிலை காணப்படுகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.