நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் சிந்தாமணி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் வசிக்காக மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியின் மூலம் அந்த பகுதி மக்கள் தங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். பொதுவாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை நீண்ட நாட்கள் சுத்தம் செய்யவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.