நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி அருகே நாகூர்-நன்னிலம் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் மூலம் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது பனங்குடி பிராவடையான் ஆற்றின் பாலத்தின் அருகே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.