கூத்தாநல்லூர் தாலுகா, லட்சுமாங்குடி கடைவீதியில் ஏராளமான கடைகள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் கடைவீதியில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான இந்த இடத்தில் தண்ணீர் தொட்டி இல்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து லட்சுமாங்குடி கடைவீதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.