திருவாரூர் நகராட்சியில் கந்தப்பமடம் முடுக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டி உரிய பராமரிப்பின்றி காட்சி பொருளாக உள்ளது. இதனால் போதிய தண்ணீரின்றி அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.