திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், கண்ணுடையான்பட்டி ஊராட்சி, மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக கோவில் வளாகத்திற்குள் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.