சேலம் சேலத்தாம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட அண்ணாநகர், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சுமார் 120-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக குழாய்கள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. குழாய்கள் பொருத்தப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்களுக்க குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.