காட்சி பொருளான மினி குடிநீர் தொட்டி

Update: 2022-09-20 09:20 GMT
மரக்காணம் ஒன்றியம் வட கொளப்பாக்கம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அங்குள்ள மினி குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இங்குள்ள மின் மோட்டார் திருடு போய் விட்டதால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்