பண்ருட்டி ஊராட்சி ஒன்றயத்திற்கு உட்பட்ட எலவத்தடி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின்மோட்டார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழுதானது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் மோட்டார் பழுது நீக்கம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கிராம மக்கள் நலன் கருதி பழுதான மின்மோட்டாரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.