மரக்காணம் பூமி ஈஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள தீர்த்த குளத்தில் தண்ணீரே தெரியாத நிலையில் அதிக அளவில் செடி, கொடிகள் வளர்ந்தும், பாசிகள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால் குளத்தில் குளிக்கும் பக்தர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குளத்தை தூர்வார அதி்காரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும்.