மணப்பட்டு கன்னியக்கோவில் சாலையில் புத்துக்கோவில் அருகில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வெளியேறி வருகிறது. தற்போது மணப்பட்டு கன்னியக்கோவில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து இந்த கசிவு ஏற்படும் பட்சத்தில் சாலை பணி முடக்கம் ஏற்படும் நிலை உருவாகும். மேலும் குடிநீர் குழாயில் கசிவு ஏற்படுவதால் குடிநீரில் கழிவு நீர் கலக்க வாய்ப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.