கடையம் அருகே முதலியார்பட்டி காந்திநகர் பகுதியில் சாலையோரம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு வாரங்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் சேறும், சகதியுமாக கிடப்பதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.