தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் அண்ணாநகர், செல்லும் வழியில் 2009-ம் ஆண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இதுவரை இந்த குடிநீர் நிலையம் பயன்படாமல் காட்சி பொருளாக உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், விடுதி மாணவர்கள், குடிநீர் வசதி இன்றி அவதி அடைந்து வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.