திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமம் எஸ்.எம்.ஏ. நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இந்த மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி காட்சி பொருளாக உள்ளது. எனவே மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.