தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை மேல் சாலைத்தெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீ்ர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதி தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவருகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?