ராஜாக்காமங்கலம் எள்ளுவிளையில் அமைந்துள்ள கோவிலின் அருகில் உள்ள குடிநீர் குழாயின் வால்வு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குடிநீர் வீணாக அருகில் உள்ள தென்னந்தோப்பில் பாய்ந்து கொண்டிருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த வால்வை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
- கோ.ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி