திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம், முருங்கை பஞ்சாயத்து புதுப்பாளையம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக வினியோகிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.