மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-14 12:13 GMT

கூத்தாநல்லூர் தாலுகா, கண்கொடுத்தவணிதம் ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கமலாபுரம் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உரிய பராமரிப்பின்றி சேதமடைந்து அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்