பழனி நகராட்சி 23-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குடிநீர் சீராக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.