தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் பகுதி நரியனூர் தெற்கு தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முறையாக தண்ணீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். அதுமட்டுமின்றி வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீர் மின்மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்படுகிறது. இதனால் அந்த தெருவில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள அனைவருக்கும் முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?