சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார் பாளையம் பி.ஏ.பி. வாய்காலில் பல இடங்களில் கல், மண், பழையதுணிகள், தேங்காய் மட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் பொதுமக்களும் வாய்க்காலில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அதனால் வாய்க்காலை தூர்வாரி தூய்மைப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிரவன், சுல்தான்பேட்டை