விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மழைநீரை வெளியேற்ற உரிய வாய்க்கால் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் மழை பெய்யும்போது எல்லாம், பள்ளி வளாகத்தை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மழைநீரை வெளியேற்ற பள்ளியில் வாய்க்கால் வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.