மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கற்பகநகரில் உள்ள நகராட்சி மேல்நிலை குடிநீர்த்தொட்டி சேதமடைந்து கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் களைச்செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்தப்பகுதியை கடக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.