புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-09-10 11:41 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் அடிபம்பு பழுதடைந்து உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த அடிபம்பை உடனடியாக சரிசெய்து உள்ளனர். எனவே, கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்