நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்ெசட்டி ஊராட்சியில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் குழாய்கள் இல்லாததால் தண்ணீர் வீணாக வெளியேறி சாக்கடை நீரில் கலக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடைசியில் இருக்கும் குழாய்களுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீர் குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து இடங்களுக்கும் ஒரே சீராக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
ராஜேஷ், முட்டாஞ்செட்டி, நாமக்கல்.