வீணாகி வரும் குடிநீர்

Update: 2022-09-09 17:14 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் நடுக்கோம்பையில் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகில் பிரதான குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் அதில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு தண்ணீர் வீணாகி வருகிறது. அதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-விஷால் கண்ணன், காரவள்ளி, நாமக்கல்.

மேலும் செய்திகள்