திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரங்கியம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைத்து பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுதொடர்பாக பலமுறை அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், இதை கவனத்தில் கொண்டு உடனடியாக குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.