நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் அந்த பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, காளிபட்டி, நாமக்கல்.