திருப்பூர் மேட்டுப்பாளையம் பி.என்.ேராடு லட்சுமி நகரில் ஒரு பர்னிச்சர் கடை எதிரே உள்ள பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார்கள்.இதனால் கொசுக்கள் அதிகமாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைதண்ணீர் தேங்காதவாறு கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.