திருப்பூர் மாநகராட்சி 46-வது வார்டு யாசின் பாபு நகர் குடியிருப்பு பகுதியில் 1-வது மஸ்ஜித் தெரு முதல் 3- வது தெருவரை தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. வாரம் ஒரு முறை டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் நிரப்பப்படும். இந்த தண்ணீர் தான் அத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் மூன்று மாதங்களாக தண்ணீரை வினியோகம் செய்வதில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே மக்கள் நலன் கருதி தண்ணீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?