ஆபத்தான குடிநீர் தொட்டி இடிக்கப்படுமா?

Update: 2022-07-11 16:34 GMT

வெண்ணந்தூர் அருகே வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுத்து நீர்தேக்க தொட்டியில் நிரப்பப்பட்டது வருகிறது. இந்த நிலையில் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்து உடையும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இந்த தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் ஆபத்தான தொட்டியை இடித்து விட்டு புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊர் பொதுமக்கள், வெள்ளைபிள்ளையார் கோவில், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்